ஐ.நா.சபையைக் கலக்கிய தமிழ்நாட்டு பிரதமர்

 

    இப்படி தொடர்ச்சியா செயலபட்டதால பிரதமர் பதவிக்கு என்னைத் தேர்வு செஞ்சாங்க. 2013 மார்ச் மாதம் முதல் முறைய ஐ.நா சபைக்கு போனேன். குழந்தைகள், பெண்களோட பிரச்சனைகள் பற்றி ஏழு நிமிஷம் பேசினேன். அதைக்கேட்டு நியூயார்க்ல உள்ள ஃபார்டாம் யுனிவர்சிட்டியில பேசச் சொன்னாங்க. பெண்கள் எதிர்கொள்ற பிரச்சினைகள் பற்றி பேசினேன் உலகத்தில 85% பெண்கள் ஏதோ ஒரு முறையில வன்முறையை சந்திக்கிறாங்க, பெண் குழந்தைகள் நிறைய சித்திரவதைகளை அனுபவிக்கிறாங்கனு நான் பேசினப்போ பலபேர் கண் கலங்கினதா அம்மா சொன்னாங்க.

     

    அடுத்து '2015 வளர்ச்சிக்கான பாதை' ன்னு ஒரு கருத்தரங்கம். அதுக்காக இந்தியா முழுவதிலுமிருந்து 12 குழ்ந்தைகள் ஐ.நா வுக்கு போனோம், சிறப்பு திறனாளிகளை ஒதுக்காம சராசரி மாணவர்களோட சேர்த்து பொதுக்கல்வி கொடுக்கணும்னு பேசினேன். சரியான திட்டம்னு எல்லாரும் பாரட்டினாங்க....' என்கிற ஸ்வர்ணா, "குழந்தைகள் பாராளுமனறம் நிறைய பொறுப்புணர்வை உருவாக்கியிருக்கு. ஒரு நாள் ஸ்கூல் போகும்போது டிரைவர் அண்ணா, பகல்ல் கூட தெருவிளக்கு எரியுதுன்னு கவலையோட சொன்னார். உடனே ஜஸ்ட் டயல்'ல நம்பர் வாங்கி மின்வாரியத்துக்கு பேசி லைட்டை ஆஃப் பண்ணச் சொன்னேன். எங்க தெருவுல நாலஞ்சு நாளா குப்பை அள்ளலே. மாநகராட்சி அலுவலகத்துல கம்பளைன்ட் பண்ணினேன். உடனடியா அள்ளிட்டாங்க.." என்கிறார் பெருமிதமாக.

     

    Courtesy : Neelagandan, V. (2014 , Feb. 24). Kungumam, 50 - 54

ஸ்வர்ணலட்சுமி
Contact Information

8A/ 1A Arul Nagar,

Paalpannai Road,

Nagercoil-629001,

Kanyakumari District,

Tamilnadu, India.

Phone: +91 4652 278223
Mob: +91 94426 48224
E-mail: ncnworld2000@yahoo.com
See also...