ஐ.நா.சபையைக் கலக்கிய தமிழ்நாட்டு பிரதமர்

 

  "மை நேம் ஈஸ் ஸ்வர்ணலட்சுமி ஐயாம் தர்டடீன் இயர்ஸ் ஓல்ட். கமிங் ஃப்ரம் இண்டியா. ஐயாம் தி சைல்டு பிரைம் மினிஸ்டர் ஆஃப் தமிழ் நாடு, பாண்டிச்சேரி சில்ட்ரன் பார்லிமென்ட்.."

   

  பால்யம் மறையத அந்தக குரலைக் கேட்டு அரங்கமே நிமிர்ந்து பார்த்தது. 'குழந்தைகள் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள்' பற்றி அந்த ஆய்வரங்கை நடத்திக் கொண்டிருந்த சிலி நட்டின் முன்னாள் அதிபர் மிஷல் பேஷ்லெட் புன்னகையோடு பார்க்க ஸ்வர்ணலட்சுமி கணீர் குரலில் பேச்சைத் தொடர்கிறார்.

   

  குழந்தைகளின் பிரச்னைகளைக் குழந்தைகள் தான் பேசவேண்டும். அதற்காகதான் நாங்கள் குழந்தைகள் பாரளுமன்றத்தை நடத்தி வருகிறோம். குழந்தைத் திருமணம், கல்வியுரிமை மறுப்பு உள்பட பல பிரச்னைகளை நாங்கள் தீர்த்து வைத்திருக்கிறோம். அதனால் ஐ.நா.வின் ஒரு அங்கமாக குழந்தைகள் பாரளுமன்றத்தை அங்கீகரிக்க வேண்டும்.

   

  ஸ்வர்ணலட்சுமியின் கோரிக்கைக்கு அரங்கம் அதிர்ந்து. குழந்தைகளின் உரிமைகளை குழந்தைகளே பேசவும், பொறுப்பான, தகுதிவாய்ந்த குடிமக்களாக அவரகளை உருவாக்கவும் "குழந்தைகள் பாரளூமன்றம்" என்ற அமைப்பு இந்தியாவின் 21 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றது. சுமார் 60 ஆயிரம் குழந்தைகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கிறார்கள். தமிழ்நாடு புதுச்சேரிக்கான குழந்தைகள் பாரளூமன்றத்தின் பிரதமர்தான் ஸ்வர்ணலட்சுமி. இந்தியாவின் பிரதிநிதியாக 2 முறை ஐ.நா. சபையில் பேசித் திரும்பியிருக்கிற ஸ்வ்ர்ணா. பார்வையற்ற சிறப்புப் பள்ளியில் 10ம் வகுப்பு ப்டிக்கிறார் ஸ்வ்ர்ணா. அப்பா ரவி பொறியாளர். அம்மா லட்சுமிதேவி யோகா ஆய்வாளார். பார்வையில்லை என்ற குறை தெரியாவண்ணம் அம்மாவும், அப்பாவுமே ஸ்வ்ர்ணாவுக்கு வெளிச்சமாக இருக்கிறார்கள். படிப்பில் மட்டுமின்றி இசை, செஸ், நீச்சல் என கலக்குகிறார் ஸ்வ்ர்ணா.

   

  "குரோமோசோம் பிரச்னையால பிறக்கும் போதே ஸ்வ்ர்ணாவுக்கு பார்வையில்லை. முதல்ல ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. ஒரு கட்டத்துல ஆண்டவன் கொடுடத்த பரிசா நினைச்சுக்கிட்டோம். எங்களையே நாங்க அவளுக்காக அர்ப்பணிச்சுட்டோம். விவேகானந்தரையும், ஜான்சிராணியையும் சொல்லி சொல்லி வளர்த்தோம். எதுக்காக்வும் எங்களை சார்ந்திருக்காம சுயமவளர விட்டோம். கண்ணால பார்க்க முடியாததை மனதால பார்க்க பழகிட்ட. அவ எதையெல்லாம் விரும்பினாளோ அதை எல்லாம் கத்துக்க வஸ்சோம். எல்லாத்துலயும் முன்னனிக்கு வந்தா. எங்களோட வழிகாட்டுதலை விட அவளோட ஆர்வமும் ஊழைப்புமே அவளோட வளர்ச்சிக்குக் காரணம்....." நெகழ்ச்சியாகச் சொல்கிறார் அம்மா லட்சுமி தேவி.

   

  மத்தவங்களுக்கு உதவுற வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கைன்னு அம்மா சொல்லுவாங்க. அப்பா கொடுக்கிற காசை எல்லாம் சேத்து வச்சு, சிரமப்படுர ஃப்ரண்ஸுக்கு யூனிபார் வாங்கி கொடுப்பேன். அப்பப்போ ஏதாவது நிகழ்ச்சி நடத்தி காசு சேத்து மத்தவங்களுக்கு உதவி செய்வேன். குழந்தைகள் பாரளளுமன்றம் மேலும் சேவை உணர்வை அதிகப்படுத்திச்சு. தன்னோட உரிமைக்காக கட்டும் மில்லாம சமூகத்தோட உரிமைக்காகவும் குழந்தைகள் குரல் கொடுக்கணும். அடிமட்ட குரலும் மேலோங்கி ஒலிக்கணும். இதுதான் எங்க அமைப்போட நோக்கம். பைப்புலதண்ணி வராததுல ஆரம்பிச்சு, குழந்தைத் திருமணம் வரைக்கும் எல்லாத்துக்கும் நாங்கள் குரல் கொடுப்போம்.

   

  எங்க்க ஸ்கூல்ல பாராளும்ன்றம் அமைச்சப்போ நானும் சேந்தேன். எங்கபாராளுமன்றத்தில் நிறைய ஜனனாயகம் உண்டு. தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வுசெய்யப்படுவங்க. அமைச்சர்கள் மேல குற்றம் இருந்தா தாராளமா அவரை எதிர்க்கலாம். முதல்ல பள்ளிக்கூட அளவுல தகவல் தொழில்நுட்ப அமைச்சரானேன். அப்புரம், தமிழ்நாடு-புதுச்சரி மாநில நிதி அமைச்சரானேன். அப்போதுதான் தானே புயல் வந்துச்சு. எல்லார்கிட்டயும் நிதி கலக்ட்பன்னி நோட்டு புத்தகங்கள் வாங்கி கொண்டு போய், பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கிற மாணவர்களுக்கு கொடுத்தோம். 'ஒரு ரூபாய் இயக்கம்' நடத்தி கஷ்டப்படுற எங்க ஃப்ரண்ட்ஸுக்கு டிரஸ், எழுதுபொருட்கள், புத்தகங்கள் வாங்கித்தந்தோம். 12வது ஐந்தாண்டுத் திட்டம் போடப்பட்ட போது, குழந்தைகளோட குரலையும் கேட்கணும்னு போராடி, திட்டக்குழுவை சந்தித்து சில பரிந்துரைகளை கொடுத்தோம். அதை செயல்படுத்துறதை கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்தோம்.

   

  1960ல் நாட்டோட மொத்த உற்பத்தியில 6 சதவீதத்தை குழந்தைகளோட கல்விக்கும், 3 சதவீதத்தை சுகாதாரத்துக்க்கும் செலவு செய்யானும்முனு சொன்னாங்க. இதுவரைக்கும் அது நடக்கலே. இப்போ உலகசுகாதர நிறுவனம், 'ஹெல்துக்கு 5 சதவீதம் செலவு செய்யாணும்'னு பரிந்துரைக்குது. அதுக்காக ஒரு குழுவை அமைத்து ராஜ்ய சபா துணை சபாநாயகரை சந்தித்து மனு கொடுத்தோம்.

   

ஸ்வர்ணலட்சுமி
Contact Information

8A/ 1A Arul Nagar,

Paalpannai Road,

Nagercoil-629001,

Kanyakumari District,

Tamilnadu, India.

Phone: +91 4652 278223
Mob: +91 94426 48224
E-mail: ncnworld2000@yahoo.com
See also...