<

குழந்தைகள் பாராளுமனறம் விழிப்புணர்வு பாடல்கள்

பாடல் - 7
 • தேசத்துரோகி ஆகணும்னா பெப்சியைக்குடி
 • வெள்ளக்காரன் வாரிசாக்ணுண்ணா கோலா குடி
 • (1)
 • இந்தியவின் வெப்பத்துக்கு இளநீர் குடி - அதில்
 • இளைப்பாறும் விவசாயி எத்தனை கோடி
 • என்ன தாண்டா பெப்சியில இருக்குதப்படி - அதுக்கு
 • எரும மாட்டு மூத்திரத்தை கப்புல பிடி
 • (2)
 • கண்னுக்கு குளுகுளுன்னு ரேபான் கண்ணாடி
 • காலுக்கு மெதுமெதுன்னு நைக்கு காலணி
 • கவர்மெண்டு வேலைக்கெல்லாம் அடிச்சிட்டான் ஆணி
 • இனி காலம் தள்ள வெள்ளக்காரன் கால நக்கு நீ
 • (3)
 • எப்படிப் பாக்குது ஜப்பான் சவுரி முடி
 • ஏப்ரல் ஒண்ணு எங்கும் பாரின் நெடி
 • தேசிய தொழிலெல்லாம் போச்சு திருப்பதி - சோகத்துக்கு
 • வேலையில்ல மண்டைக்கென்ன பாரின்முடி
 • (4)
 • சக்கரையும் கொப்பரையும் இறக்குமதி
 • சம்சாரி ஆகிடுகிறான் நாடோடி
 • பொண்டாட்டிய வித்து தண்டட்டிய வாங்கு - உள்ள
 • வேலைய விட்டு ஒரு முழும் கயித்துல தொங்கு
பாடல் - 8
 • மாமதுரை சென்று வந்தால் என்ன?
 • திருப்பதிக்கு திரும்பிவந்தால் என்ன?
 • வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?
 • வெள்ளைமனம் வேண்டாமோ அம்மா
 • மனதில் சாந்தி இல்லையே
 • முகத்தில் சாயல் இல்லையே
 • நீ மனிதன் போல வாழவில்லையே
 • (1)
 • ஓட்டு போட காசு கொடுப்பதென்ன
 • லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதென்ன
 • சுண்ணாம்பை நீ சோகத்தில் சேர்ப்பதென்ன
 • கொள்ளை லாபாம் அடிக்க துடிப்பதென்ன
 • மனதில் சாந்தி . . . . .
 • (2)
 • காப்பியிலே க்லந்து விற்கபதென்ன
 • கடலைக்காயை குறைத்து விற்பதென்ன
 • அரிசியிலும் கலக்கும் கற்களென்ன
 • வெல்லத்திலும் புதுவெல்லம் என்ன
 • மனதில் சாந்தி . . . . .
 • (மாமதுரை சென்று . . . . )
பாடல் - 9
 • சமுதாயம் மாறுகின்ற காலம் நெருங்குது
 • இங்கு சாதி சமய பேதமெல்லாம் மாறபோகுது
 • நீதி கெட்ட சமுதாயம் அழிய போகுது - 2
 • -சமுதாயம் மாறுகின்ற
 • (1)
 • நிலங்கள் எல்லாம் ஒருவனிடம் குவிந்து கிடக்குது
 • நித்தம் உழைக்கும் மக்கள் வறுமையினால் செத்து மடியுது
 • தலைவிதியோ என்று எண்ணி தாழ்ந்து போனது - 2
 • அதை புதுவழியில் நாம் அதனை மாற்றி அமைக்கணும்
 • -சமுதாயாம் மாறுகின்ற
 • (2)
 • உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்டால் உதையும் கிடைக்குது
 • இந்த உளுத்துப்போன சர்க்காரும் உதவ மறுக்குது
 • சட்டங்களும், திட்டங்களும் சமயம் சொல்லுது(2)
 • சாதி சமதுதுவமே பேச்சளவில் சந்தி சிரிக்குது
 • - சமுதாயாம் மாறுகின்ற
பாடல் - 10
 • சின்னப் பொண்ணு சிவகாமி
 • பள்ளிப் போகும் பருவத்திலே
 • சிதைஞ்சு நெலயிழந்து வாழுறேன்
 • படிக்க வழியில்லாம அழுகிறேன் - நான்
 • (1)
 • படிக்க பள்ளிக்கூடம் ஊருதோறும் இருக்குது
 • படிப்பு எனக்கு மட்டும் விதிவிலக்காய் போகுது
 • சின்ன சின்ன பூக்களாக உயர்ந்த வாழ்வு காண
 • குடும்ப பாரம் என்ன அழுத்துத - சின்ன
 • ஒடம்பும் தாங்கிப்போக மறுக்குது
 • (2)
 • வளரும் பருவத்திலே உண்பதற்கு சோறில்ல
 • அசந்து படுப்பதற்கு கையளவு இடமில்லை
 • கோழி கூவும் நேரத்தில் பச்சத்தண்ணி குடிச்சிகிட்டு
 • பறந்து நானுந்தான் ஓடுறேன் - இந்த
 • நெலம மாறுமாண்ணு தெரியல
பாடல் - 11
 • ஏழை என்ன கிள்ளுகின்ற கீரையா - இதை
 • கேட்பதற்கு யாரும் இங்கு இல்லையா, இல்லையா
 • ஏழை என்ன கிள்ளுகின்ற கீரையா
 • (1)
 • ஜ்னநாயகம் என்பது பூஞ்சோலையாம்
 • நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னராம்
 • இந்த மன்னருக்கு உண்ண உணவு இல்லையாம்
 • எந்த மன்னருமே உணவு கொடுப்பதில்லையாம்
 • இல்லையாம்
 • - ஏழை என்ன . . . .
 • (2)
 • ஏழைக்கெல்லாம் வீடு என்று சொல்லுவார்
 • அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
 • ஏய்ப்பவரே இன்றும் என்றும் உடையவர்
 • ஏழை உழைப்பினிலும் உண்மையிலும் உயர்ந்தவர்
 • உயர்ந்தவர்
 • - ஏழை என்ன . . . . . .
 • (3)
 • முதலாளித்துவம் உள்ள நாட்டிலே
 • அவர் முதலீடு எங்களது உழைப்பிலே
 • உழைத்து உழைத்து எங்க உடம்பு கருத்தது
 • எங்க உழைப்பினிலே அவங்க உடம்பு கொழுத்தது கொழுத்தது
 • - ஏழை என்ன . . . . . .
பாடல் - 12
 • தந்தானா தந்தனத்தானா
 • தனன னன்னா தந்தானா
 • தந்தானா தந்தனத்தானா
 • தனன னன்னா தந்தானா
 • (1)
 • தலைவர் படம் பார்த்து பாத்து
 • பள்ளிக்கூடம் நான் மறந்தேன்
 • பள்ளிக்கூடம் நான் மறந்தேன்
 • படிப்பையெல்லாம் வீணடிஸ்சேன்
 • (2)
 • ரஜினிகாந்து படம் பாத்து
 • இரவெல்லாம் தூக்கம் கெட்டேன்
 • காதல் மன்னன் கமலகாசன்
 • கனவில் கண்டு கண் விழிச்சேன்
 • (3)
 • காலேஜிக்கு கட்டடிச்சி
 • கர்மவீரன் உன் நினைவால்
 • ரசிகர் மன்றம் நான் வச்சி
 • ராப்பகலா பாடுபட்டேன்
 • (4)
 • திரைப்படமும் டிவி பெட்டியும்
 • திசை திரும்பி விட்டுடிச்சி
 • நம்ம நிலைய உணராம
 • மயக்கத்துல விட்டிடுச்சி
 • (5)
 • சினி உலக மோகத்துல
 • சிக்கியிருந்தது போதுமய்யா
 • இளைஞரெல்லாம் இயக்கமாக
 • சீக்கிரம் வந்து சேருங்கைய்யா

Contact Information

Neighbourhood Community Network (NCN),

Montfort Social Institute (MSI)

Church Colony Road, Montfort Nagar, Church Colony, Uppal, Hyderabad, Telangana 500039, India.

Phone: +91 4652 278223
Mob: +91 94426 48224
E-mail: ncnworld2000@yahoo.com
See also...