குழந்தைகள் பாராளுமனறம் விழிப்புணர்வு பாடல்கள்

  பாடல் - 1
  ஒரு விரல் ஆட . . . . . . உடலும் ஆட
  • ஒரு விரல் ஆடியது அதை நிறுத்தப்பார்த்தேன் மறுவிரல் ஆடியது
  • ஒரு விரல் மறுவிரல் ஆடியது. அதை நிறுத்தப்பார்த்தேன் ஒரு கை ஆடியது
  • ஒரு விரல், மறுவிரல், ஒருகை, மறுகை ஆடியது. அதை நிறுத்தப்பார்த்தேன் ஒரு கால் ஆடியது.
  • ஒரு விரல், மறுவிரல், ஒருகை, மறுகை, ஒரு கால் ஆடியது. அதை நிறுத்தப்பார்த்தேன் மறுகால் ஆடியது.
  • ஒரு விரல், மறுவிரல், ஒருகை, மறுகை, ஒருகால், மறுகால் ஆடியது. அதை நிறுத்தப்பார்த்தேன் ஒரு இடை ஆடியது.
  • ஒரு விரல், மறுவிரல், ஒருகை, மறுகை, ஒருகால், மறுகால், ஒரு இடை ஆடியது. அதை நிறுத்தப்பார்த்தேன் என் உலலும் ஆடியது.
  பாடல் - 2
  மெளனபுரட்சி
  • மெளனபுரட்சி ஒண்ணு நடக்குது - பலர்
  • மனசுக்குள் பூகம்பம் வெடிக்குது
  • மதிக்கின்ற கூட்டங்கள் திருந்தனும் - இல்லை
  • எரிமலை ஒரு நாள் வெடித்து விடும்
  •  
  • 1. சாதி மதம் என்று சொல்லியே நாட்டில்
  • சச்சரவை உண்டு பண்ணுறான் - 2
  • பெண்ணுக்கு உரிமை ஏட்டினிலே - ஆனால்
  • எத்தனை கொடுமைகள் வீட்டினிலே - 2
  பாடல் - 3
  பள்ளியில் படிக்க ஆசை
  • ஆசையா இருக்குதுங்க்
  • ஆசையா இருக்குதுங்க் - ரொம்ப
  • பள்ளியில் படிக்க
  • இந்த ஆசையத் தீர்க்க என்ன வழி
  • எந்தவழியுமே தெரியலிங்க - ஆசையா
  •  
  • 1.அஞ்சு வயசுல பள்ளிக்குப்போக
  • ஆர்வத்தோடு கிளம்பினேன்
  • அம்மா வந்து அடிச்சா என்ன
  • தம்பிய பார்த்துக்கச் சொல்லிட்டாங்க
  •  
  • 2. பக்கத்து வீட்டு பார்வதி பொண்ணு
  • டவுனுல போயி படிக்கும் போது
  • நானோ இப்போ காடுமேடு சுத்தி
  • அலையிறேனே பொழப்புக்காக
  •  
  • 3. ஆசையா இருக்குதுங்க பள்ளியில் படிக்க
  • இந்த ஆசையத்தீர்க்க என்ன வ்ழியின்னு
  • தேடி அலைஞ்சு பார்க்கப்போறேன்
  • ஆசையா இருக்குதுங்க ரொம்ப ஆசையா இருக்குதுங்க
  பாடல் - 4
  குழந்தைகளின் பிரச்சினைகள்
  • சின்னஞ் சிறிய வயசுல துள்ளித்திரியும் பருவத்துல
  • அன்பின் ஆதரவின்றி பள்ளிக்கூடப் படிபுமின்றி
  • அநாதையாய் அலையுரேனே சின்னஞ் சிட்டுங்க
  •  
  • சிறகடித்து பறக்கவேண்டிய சின்னஞ் சிட்டுங்க
  • சிதைந்து போன கனவோடு வாழும் நிலைமைங்க
  •  
  • வாழ்க்கை என்னும் பந்தயத்தில் ஒட நினைத்து
  • வாழ்க்கையை தொலைச்சு புட்டு தேடும் குருவிங்க
  • வருங்கலத்த கனவில் கூட பார்க்க முடியல
  • எங்களுக்காய் வருந்த இங்க யாரும் இல்லைங்க
  • இது கனவு இல்லைங்க எங்க உண்மை நிலைமைங்க (2)
  பாடல் - 5
  (குழந்தை பாராளுமன்ற இறைவணக்கப்பாடல்)
  • எல்லாம் வல்லவன் ஒருவனன்றோ - அவன்
  • எமை காக்கும் அருள் இறைவனன்றோ
  • எல்லா உலகினை படைத்தளித்தான்
  • என்றும் ஏகமாய் நின்றருள் புரிகின்றான்
  • பல்பெரும் சமயத்தின் உட்பொருளாகவே
  • பல பல நாமங்கள் சூடி நின்றான்.
  •  
  • 1.அன்புருவாகவே அகிலமெல்லாம் - அவன்
  • அனைத்துயிருக்குயிராய் அருட்சுடராய்
  • அறிவினுள் அறிவாய்
  • அணுவினுள் அணுவாய்
  • கருணையின் கடலாய்
  • கசிந்து நின்றான்
  • இத்தனை கோடி இன்பங்கள் தந்து
  • எம்பிரான் இணையடி பணிமனமே
  பாடல் - 6
  • புதிய இந்தியா படைக்கப் பூபாளம் பாடுவோம்
  • இளைய கரங்கள் ஆயிரம் உறுதியோடு கூடுவோம்
  • எட்டு திக்கும் நாம் இனி சுட்டு விரல் நீட்டுவோம்
  • பட்டறுந்து பழமைகள் தட்டு கெட்டு ஓடட்டும்
  • (டட்ட டட்ட டட்டடா டட்ட டட்ட டட்டடா
  • டட்ட டட்ட டட்டடா டட்ட டட்ட டட்டடா)
  •  
  • (1)
  • நிலவு கூட இன்று நம் கைகளுக்குள் ஆடுது
  • கனவு மெல்ல உடை துறந்து உண்மைதனை தேடுது
  • பழைய கால குமிழ் உடைந்து பாதைகளும் மாறுது
  • புதிய கீதம் புயலைப் போல சீறி இங்கு பாயுது
  • (டட்ட டட்ட டட்டடா டட்ட டட்ட டட்டடா
  • டட்ட டட்ட டட்டடா டட்ட டட்ட டட்டடா)

Contact Information

8A/ 1A Arul Nagar,

Paalpannai Road,

Nagercoil-629001,

Kanyakumari District,

Tamilnadu, India.

Phone: +91 4652 278223
Mob: +91 94426 48224
E-mail: ncnworld2000@yahoo.com
See also...